உணவுப் பொருட்களை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ய ட்ரம்ப் திட்டம்., தடையாக நிற்கும் நாடு
ஐரோப்பாவிற்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ட்ரம்ப்பின் திட்டத்திற்கு பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டும் என விரும்புகிறார்.
ஆனால் ஐரோப்பா உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது.
அமெரிக்க விவசாயப் பொருட்கள் மீது ஐரோப்பாவின் கட்டுப்பாடுகள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஹார்மோன் கலந்த மாட்டிறைச்சி, குளோரினில் கழுவப்பட்ட கோழி இறைச்சி, மரபணு மாற்றப்பட்ட சோளம் போன்ற அமெரிக்க உணவுப் பொருட்கள் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக அனுமதி பெறவில்லை.
ஐரோப்பிய நாடுகள், Precautionary Principle என்ற முன்னெச்சரிக்கை முறையை பின்பற்றுகின்றன. இதில், ஒரு பொருள் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்காமல் சந்தைக்குள் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் அமெரிக்கா Risk-Based முறையை பின்பற்றுகிறது, அதாவது ஒரு பொருள் தீங்கானது என நிரூபிக்கப்படாத வரை அனுமதிக்கப்படும்.
பிரேசிலின் பெரிய அறுவடை - அமெரிக்காவிற்கு போட்டி
ட்ரம்ப்பின் முதல் ஆட்சியில் பிரேசில் மற்றும் அர்ஜென்ட்னாவில் பயிர் விளைச்சல் குறைந்ததால், ஐரோப்பா அமெரிக்காவில் இருந்து சோயாபீன்ஸ் வாங்கியது.
ஆனால் இந்த ஆண்டு, பிரேசில் 325.7 மில்லியன் டன்னிற்கும் அதிகமான புதிய உற்பத்தியை எட்டியுள்ளது, இதன் காரணமாக ஐரோப்பா அமெரிக்காவை தவிர்த்து பிரேசிலில் இருந்து உணவுப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
இதனால், ட்ரம்ப்பின் ஐரோப்பா-அமெரிக்க உணவுப் பொருட்கள் வர்த்தக திட்டம் ஒரு புதிய சவாலை எதிர்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |