இரண்டு பக்கமும் ஆயுதம் ஏந்திய ஹமாஸ் குழுவினர்... பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் காட்சிகள்
இஸ்ரேலிலிருந்து பிடித்துச் சென்று பிணைக்கைதிகளாக வைத்திருந்த மேலும் இரண்டு பேரை ஹமாஸ் ஆயுதக்குழு விடுவித்துள்ளது.
இரண்டு பெண்களை விடுவித்த ஹமாஸ்
ஹமாஸ் ஆயுதக்குழு, அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதுடன், சுமார் 200 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது.
Credit: Reuters
அப்படி பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்களில், அமெரிக்கர்களான Judith (59) மற்றும் அவரது மகளான Natalie Raanan (17) ஆகிய இருவரும், கத்தார் நாட்டின் தலையீட்டால் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் இரண்டு பெண்கள் விடுவிப்பு
இந்நிலையில், நேற்று மாலை, மேலும் இரண்டு பெண்களை ஹமாஸ் விடுவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டவர்களான Yocheved Lifshitz (85) மற்றும் Nurit Cooper (79) ஆகிய இருவரே விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.
Credit: Reuters
ஆயுதம் ஏந்திய ஹமாஸ் குழுவைச் சேர்ந்த இரண்டு பேர், அந்த இரண்டு பெண்களையும் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் காட்சிகளை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட இருவரும், மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Credit: Reuters
இந்த பெண்களை விடுவிப்பதற்கும், கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளே மத்தியஸ்தம் செய்துள்ளதும், முன்பு விடுவிக்கப்பட்ட பெண்களைப்போலவே, இவர்களும் மனிதாபிமான அடிப்படையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |