தீவிரமடையும் ஆம்பில் புயல்... நூற்றுக்கணக்கான விமானங்கள், புல்லட் ரயில் சேவை ரத்து
ஜப்பானின் டோக்கியோ பகுதியில் ஆம்பில் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், நூற்றுக்ககணக்கான விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக வலுவானது மற்றும் தீவிரமானது
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தால் வலுவானது என வகைப்படுத்தப்பட்டுள்ள ஆம்பில் புயனாது உள்ளூர் நேரப்படி பகல் 9:00 மணியளவில் ஜப்பானின் பசிபிக் கடற்கரையிலிருந்து 690 கிமீ (430 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அது டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நகர்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆம்பில் புயல் தொடர்பில், மிக வலுவானது மற்றும் தீவிரமானது என இருவகை எச்சரிக்கையை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மணிக்கு 78 மைல்கள் வேகத்தில் காற்று வீசும் என்றும், அதிகமாக மணிக்கு 112 மைல்கள் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளனர். புயல் தீவிரமடையும் நிலையில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக்கொண்டுள்ளதுடன், கன மழை மற்றும் அதிக உயரத்தில் அலை எழலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
60,000 பயணிகளுக்கு மேல்
இதனிடையே, ஆம்பில் புயல் காரணமாக 191 உள்ளூர் விமானங்களும் 26 சர்வதேச விமானங்கலும் ரத்து செய்துள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் ANA விமான சேவை நிறுவனம் 280 உள்ளூர் விமானங்களை வெள்ளிக்கிழமை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதனால் 60,000 பயணிகளுக்கு மேல் பாதிக்கப்படுவார்கள் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், டோக்கியோ மற்றும் தொழில் நகரமான நகோயா இடையே அனைத்து ஷிங்கன்சென் புல்லட் ரயில் சேவையும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்படுவதாக மத்திய ஜப்பான் ரயில்வே தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |