ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா - 5 புதிய பிரிவுகள் அறிமுகம்
ஐக்கிய அரபு அமீரக அரசு அதன் கோல்டன் விசா திட்டத்தில் 5 புதிய பிரிவுகளை அறிவித்துள்ளது.
2019-ல் அறிமுகமான 10 ஆண்டு விசா திட்டம், தற்போது மேலும் விரிவாக்கப்பட்டு, மருத்துவம், கல்வி, டிஜிட்டல் கலை, கேமிங் மற்றும் சொகுசுப் படகு தொழில்களில் சிறப்பானவர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது.
1. நீண்டகால சேவையுள்ள செவிலியர்கள்:
மே 12 - சொந்தமாக Dubai Health-ல் 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய செவிலியர்கள், 10 வருட கோல்டன் விசா பெற தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது International Nurses Day-யை முன்னிட்டு, துபாயின் பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபுஅமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் உத்தரவின் பேரில் இந்த வகை அறிமுகப்படுத்தப்பட்டது.
2. ஆசிரியர்கள் மற்றும் கல்வி பணியாளர்கள்:
தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கல்வி தரத்தை உயர்த்திய பங்களிப்புக்காக தற்போது கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
KHDA மற்றும் Ras Al Khaimah கல்வித்துறை ஆகியவை இணைந்து இந்த வாய்ப்பை வழங்குகின்றன. குடும்ப உறுப்பினர்களையும் உடனே சேர்க்கலாம்.
3. உள்ளடக்கம் உருவாக்குநர்கள் (Content Ceators)
சமூக ஊடகதுறையில் உள்ள influencers, YouTubers, filmmakers ஆகியோருக்கு Creators HQ வழியாக sponsor இல்லாமல் நேரடி விண்ணப்பம் செய்யலாம். இந்த பிரிவு ஜனவரியில் நடைபெற்ற 1 Billion Followers Summit-இல் தொடங்கப்பட்டது.
4. கேமிங் மற்றும் ஈ-ஸ்போர்ட்ஸ் நிபுணர்கள்
Dubai Gaming Programme 2033-ன் கீழ், 25 வயதிற்கு மேற்பட்ட கேமிங் தொழில்நுட்ப நிபுணர்கள், Dubai Culture-இன் அங்கீகாரம் பெற்று 10 வருட கோல்டன் விசா பெறலாம்.
5. சொகுசு படகு (Yacht) உரிமையாளர்கள்:
40 மீட்டருக்கு மேலான தனியார் சொகுசு படகு வைத்திருப்பவர்கள் மற்றும் யாட்ச் தொழில்நுட்ப நிர்வாகிகள், உற்பத்தியாளர்கள், காப்பீட்டாளர்கள் ஆகியோர் Abu Dhabi Golden Quay Initiative மூலம் கோல்டன் விசா பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UAE golden visa 2025, Dubai golden visa new rules, golden visa for teachers UAE, UAE visa for content creators, esports golden visa Dubai, luxury yacht owner UAE visa, KHDA golden visa teachers, Dubai Culture gaming visa, UAE long-term residency, apply golden visa online UAE