அரிசி ஏற்றுமதி தடை விதிப்பு... 40 சதவீதம் விலை அதிகரிக்கலாம்: விளக்கமளித்த ஐக்கிய அமீரகம்
இந்தியாவை தொடர்ந்து அரிசி ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரகமும் தடை விதித்துள்ள நிலையில், அதன் காரணம் தொடர்பிலும், விலை உயர்வு குறித்தும் விரிவான விளக்கமளித்துள்ளது.
4 மாதங்களுக்கு அரிசி ஏற்றுமதி தடை
இந்தியாவில் இருந்து பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்திய அரிசியை பயன்படுத்தும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
@afp
இந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் 4 மாதங்களுக்கு அரிசி ஏற்றுமதி தடையை விதித்துள்ளது. இதனால் உள்ளூர் சந்தையில் பாதிப்பு ஏற்படுமா? அல்லது இந்த ஏற்றுமதி விதித்ததன் காரணம் என்ன என்பது தொடர்பில் தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஐக்கிய அமீரகத்தில் இருந்து ஓமன், மேற்கு ஆப்பிரிக்காவில் பெனின், ஜிம்பாப்வே அமெரிக்கா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளுக்கு அரிசி மறு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உள்ளூர் சந்தையில் அரிசி விநியோகம்
அத்துடன் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் அரிசியை இறக்குமதி செய்கிறது. ஆனால் தற்போதைய தற்காலிக ஏற்றுமதி தடை என்பது, உள்ளூர் சந்தையில் போதுமான அரிசி விநியோகம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதே நோக்கம் என கூறுகின்றனர்.
4 மாதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது, ரத்து செய்வதாக மறு அறிவிப்பு வெளியாகவில்லை என்றால், தொடரும் என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில், மறு ஏற்றுமதிக்கு விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்கள் உரிய முறைப்படி அனுமதி பெற பொருளாதார அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரிசி ஏற்றுமதி தொடர்பான தரவுகள், குறிப்பாக எந்த நாட்டின் அரிசி உள்ளிட்டவற்றைச் சரிபார்க்க உதவும் அனைத்து ஆவணங்களாலும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
40 சதவீதம் வரையில் அதிகரிக்க வாய்ப்பு
மேலும், அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு இந்த ஆணை செல்லுபடியாகும் மற்றும் நடைமுறைகளை முடிக்க, சுங்க அதிகாரிகளிடம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
@reuters
இதனிடையே, இந்தியா ஏற்றுமதி தடை விதித்துள்ளதால், ஐக்கிய அமீரகத்தில் அரிசி விலை உயர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு, உள்ளூர் சந்தையில் அரிசி விலை 40 சதவீதம் வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், வியட்நாம், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியின் வருகை அதிகரித்தால், விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |