அமைதி ஒப்பந்தத்திற்கு முன்பும், பின்பும் உக்ரைனுக்கு உதவ தயார்! பிரித்தானியா உறுதி!
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன்பும், பின்பும் உக்ரைனுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இராணுவ பலம் கொண்டு வெல்வோம்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவும் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
சமீபத்தில் கூட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அலாஸ்காவில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் இதில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, இந்நிலையில் சீன சுற்றுப்பயணம் செய்த விளாடிமிர் புடின் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை மாஸ்கோவிற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளார்.
அதே சமயம் உக்ரைன் ஒப்பந்தத்திற்கு சம்மதித்தால் போர் நிறுத்தம், இல்லையென்றால் ரஷ்யா தனது இலக்குகளை ராணுவ பலம் கொண்டு நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் உதவ எப்போது தயார்
புடினின் இந்த கருத்தை தொடர்ந்து, பிபிசி செய்திக்கு பேட்டியளித்த பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி உக்ரைனுக்கான ஆதரவை தீர்க்கமாக வெளிப்படுத்தினார்.
அதில் உக்ரைனுக்கான ஆதரவு வழங்க பிரித்தானியாவும் அதன் நட்பு நாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்திற்கு முன்பும், பின்பும் உக்ரைனை பாதுகாக்க தயாராக இருப்பதாகவும் ஜான் ஹீலி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாரீஸில் நடைபெற உள்ள உயர்மட்ட கூட்டத்துக்கு முன்னதாக உக்ரைனிய தலைநகர் கீவ்வில் இருந்து பேசிய பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதும் உக்ரைனின் நிலம், வான், கடல் என அனைத்தையும் நட்பு நாடுகள் பாதுகாக்கும் என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |