பிரித்தானியாவில் எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்த பணவீக்கம் - வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு
பிரித்தானியாவில் பணவீக்கம் எதிர்பாராத விதமாகக் குறைந்து, நவம்பர் மாதத்தில் 3.2 சதவீதமாக பதிவாகியுள்ளது.
அக்டோபரில் இது 3.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது குறைந்திருப்பது மார்ச் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும்.
பணவீக்கம் குறைவதற்கான காரணங்கள்:
கேக், பிஸ்கட், தானியங்கள், இனிப்பு பொருட்கள் விலை குறைந்துள்ளது.
Black Friday சலுகைகள் காரணமாக பெண்களுக்கான உடை விலை குறைந்துள்ளது.
மேலும், புகையிலை விலையிலும் சிறிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த தரவுகள், இங்கிலாந்து வங்கியின் (Bank of England) வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்துகின்றன.
சந்தை ஆய்வுகளின்படி, வட்டி விகிதம் 3.75 சதவீதமாகக் குறைய 100 சதவீதம் சாத்தியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தையில் ஏற்பட்டுள்ள விளைவுகள்:
ஸ்டெர்லிங் பவுண்டு மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக குறைந்தது.
அரசு பத்திரங்களின் (gilt yields) வட்டி விகிதம் குறைந்தது.
2026-ல் பல வட்டி குறைப்புகள் நிகழும் என எதிர்பார்கப்படுகிறது.
முக்கிய புள்ளிவிவரங்கள்:
சேவைத் துறை பணவீக்கம் 4.4 சதவீதமாகக் குறைந்தது.
உணவு மற்றும் பானங்கள் விலை உயர்வு 4.9 சதவீதத்திலிருந்து 4.2 சதவீதமாகக் குறைந்தது.
மைய பணவீக்கம் (core inflation) 3.4 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாகக் குறைந்தது.
இங்கிலாந்து வங்கியின் Monetary Policy Committee (MPC) கடந்த மாதம் வட்டி விகிதத்தை நிலைநிறுத்த முடிவு செய்தது. ஆனால், ஆளுநர் ஆண்ட்ரூ பேலி விலை அழுத்தங்கள் மேலும் குறைந்தால் வட்டி குறைப்பை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.
அரசின் புதிய பட்ஜெட் நடவடிக்கைகள் 2026 ஏப்ரல் மாதம் முதல் பணவீக்கத்தை மேலும் 0.5 சதவீதம் வரை குறைக்கலாம் என இங்கிலாந்து வங்கியின் துணை ஆளுநர் கிளேர் லொம்பார்டெல்லி கூறியுள்ளார்.
இந்த தரவுகள், பிரித்தானியாவின் பொருளாதார நிலைமை மற்றும் வட்டி விகிதக் கொள்கையில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK inflation November 2025 ONS data, Bank of England interest rate cut 3.75 percent, Sterling drops after inflation surprise, UK core inflation slows to 3.2 percent, Food and beverage inflation UK 2025, Black Friday discounts impact UK CPI, Andrew Bailey MPC rate cut stance, Clare Lombardelli inflation forecast 2026, UK wage growth vs unemployment trends, UK economic outlook inflation and rates