பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான் இணைந்து உருவாக்கும் Stealth Fighter Jet; சீனாவை குறிவைத்து அமெரிக்கா முன்னெடுத்த திட்டம்
ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மூன்று நாடுகள் இணைந்து பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சீனாவுடன் போட்டியிடப் போகின்றன.
ஜப்பான், இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து 2035-ஆம் ஆண்டுக்குள் மேம்படுத்தப்பட்ட போர் விமானங்களின் சிறப்புப் படையை அறிமுகப்படுத்தவுள்ளன. இது Next Generation Fighter Jets என்று அழைக்கப்படுகிறது.
உலகில் எந்த நாட்டவருக்கும் Visa தேவையில்லை., பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாட்டின் அறிவிப்பு
ஊடக அறிக்கைகளின்படி, இந்த திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை தயார் செய்யும் பொறுப்பு ஜப்பானுக்கு உள்ளது. பிரித்தானியாவில் Assembling நடைபெறும் மற்றும் இத்தாலியின் Aeronautical Department சில முக்கிய பாகங்களை தயார் செய்யும்.
அனைத்து போர் விமானங்களும் SuperSonic ஆக இருக்கும். இந்த சர்வதேச ஒப்பந்தம் குறித்து சில மாதங்களுக்கு முன் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) தகவல் அளித்திருந்தார்.
பிரித்தானியாவின் Global Combat Air Programme (GCAP) இந்த திட்டத்தின் தலைமையகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான், இத்தாலி மற்றும் பிரித்தானிய ஆகிய மூன்று நாடுகளிலும் இந்த திட்டத்திற்கான பணிகள் ரகசியமாக ஆனால் மிக வேகமாக நடந்து வருகிறது.
மார்ச் 2035-ல் அதன் இந்த போர் விமானத்தின் படைகளில் ஒன்று வானில் காணப்படும் என்று நம்பப்படுகிறது. பிரித்தானியாவின் ராயல் விமானப்படையிடம் (Royal Air Force) சோதனை வசதி மற்றும் பராமரிப்புப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Reuters
ஜப்பானின் தலைநகர் Tokyoவில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் மூன்று நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.
இந்த Stealth Fighter Jet-களுக்காகத் தயாராகும் ரேடார்கள், தற்போது இருக்கும் ரேடார்களை விட 10,000 மடங்கு அதிகமான தரவுகளை வழங்க முடியும் என கூறப்படுகிறது.
இந்த போர் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயுத அமைப்பு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்டதாக இருக்கும் மற்றும் Hack செய்யப்படாது.
தகவல்களின்படி, இந்த திட்டத்திற்காக மூன்று நாடுகளும் ஆரம்பத்தில் 6 பில்லியன் டொலர்கள் செலவிடுகின்றன.
இந்தத் திட்டத்தில் பணியாற்ற பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலியை அமெரிக்கா தயார்படுத்தியதாக நம்பப்படுகிறது. இதற்கான முயற்சிகள் 2020 டிசம்பரில் தொடங்கியது. ஜப்பான் மற்றும் இத்தாலியின் தொழில்நுட்ப சிறப்பிற்கு பிரித்தானியா அதன் உற்பத்தி வசதிகளை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. பின்னர் மூன்று நாடுகளும் இதற்கு ஒப்புக்கொண்டன.
உண்மையில், அமெரிக்காவும் இந்த மூன்று நாடுகளும் திட்டத்தின் நோக்கம் பற்றி எதுவும் கூறாமல் இருக்கலாம், ஆனால் அதன் நோக்கம் சீனாவைச் சுற்றி வளைப்பதாகும். இதற்காக ஜப்பானின் ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் அடையாளம் வெளியிடப்படாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Japan, UK, Italy jointly develops new advanced fighter jet, China, United States of America, Next Generation Stealth Fighter Jets