திருமணமான மறுநாள் மரணமடைந்த கோடீஸ்வரர்: மனைவி மீது சந்தேகம் எழுப்பும் உறவினர்கள்
கோடீஸ்வரர் ஒருவரை கவனித்துக்கொள்வதற்காக வந்த பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்ட நிலையில், மறுநாளே அவர் மரணமடைய, அவரது உறவினர்கள் அந்தப் பெண் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்கள்.
திருமணமான மறுநாள் மரணமடைந்த கோடீஸ்வரர்
அயர்லாந்தில் வாழ்ந்துவந்த கோடீஸ்வரரான ஜோசப் (Joseph Grogan, 75) 2023ஆம் ஆண்டு அரியவகை புற்றுநோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டார்.
அவரை கவனித்துக்கொள்வதற்காக, லிசா (Lisa Flaherty, 50) என்னும் பெண் வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் பழகத் துவங்கி, நிச்சயம் செய்துகொண்டுள்ளார்கள்.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி இருவரும் திருமணம் செய்துகொள்ள, மறுநாள், அதாவது 25ஆம் திகதி ஜோசப் மரணமடைந்துவிட்டார்.
ஜோசப்பின் 4.7 மில்லியன், அதாவது, இலங்கை மதிப்பில் 1,90,51,33,720.00 ரூபாய் மதிப்புடைய 220 ஏக்கர் பரப்புள்ள பண்ணை லிசாவுக்குக் கிடைக்க உள்ளது.
ஆனால், ஜோசப் லிசாவைக் காதலித்தது தங்களுக்குத் தெரியாது என்றும், தாங்கள் யாரும் அவர்களுடைய திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ள ஜோசப்பின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஜோசப்புடைய சொத்துக்காக அவரை லிசா கொன்றிருக்கலாம் என அவர்கள் குற்றச்சாட்டு முன்வைக்க, விசாரணை அதிகாரிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், லிசாவும் ஜோசப்பும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்றும், இளம் வயதிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்றும், அவர்கள் காதலித்தது உண்மை என்றும் லிசாவுக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் குரல் கொடுத்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |