வயலில் விழுந்து நொறுங்கிய பிரித்தானிய இராணுவ ஹெலிகாப்டர்: 3 கடற்படை வீரர் உயிரிழப்பு
பிரித்தானிய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூன்று கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய இராணுவ ஹெலிகாப்டர் விபத்து
புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு தென்மேற்கு இங்கிலாந்தின் டெவோனில் உள்ள செளர்டன் கிராமத்தில் உள்ள வயல் பரப்பில் பிரித்தானிய கடற்படை ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த மெர்லின் எம் கே 4 ரக ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை கடற்படை தளபதி ஜெனரல் க்வின் ஜென்கின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை, அதே சமயம் இது தொடர்பான விரிவான விசாரணை நடந்து வருகிறது.
Utterly tragic.
— Keir Starmer (@Keir_Starmer) June 3, 2026
My thoughts are with the families, friends and loved ones of the three members of the Royal Navy who sadly lost their lives this morning.
Thank you to the emergency services responding to this horrific incident. https://t.co/4K5gp30Oly
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |