உக்ரைன் ஏவிய ட்ரோன் எண்ணிக்கையை கூறாமல்.,அழித்த ட்ரோன்களை குறிப்பிட்ட ரஷ்யா
உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் காயமடைந்ததாக ரஷ்யா கூறியுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இதில் குறைந்தது 16 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் மருத்துவர் மற்றும் துணை மருத்துவர் அடங்குவர் என பிராந்திய ஆளுநர் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரவு முழுவதும்
இதற்கிடையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உக்ரைன் இரவு முழுவதும் ஏவப்பட்ட 12 ட்ரோன்களை அழித்ததாக தெரிவித்துள்ளது.
ஆனால், எத்தனை ட்ரோன்களை உக்ரைன் ஏவியது என்ற எண்ணிக்கையை அமைச்சகம் கூறவில்லை. இதற்கு உக்ரைனிடம் இருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.
முன்னதாக, வார இறுதியில் உக்ரேனிய ராக்கெட் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு ஹோட்டலின் இடிபாடுகளுக்கு அடியில், உஸ்பெகிஸ்தான் நாட்டவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக, அண்டை நாடான குர்ஸ்க் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |