ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக்கப்படுமா உக்ரைன்? ஒரு வாரத்தில் முடிவு!
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராக சேர்க்கப்படுமா என்பது குறித்து ஒன்னும் ஒரு வாரத்திற்குள் தெரிந்துவிடும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைவதற்கான உக்ரைனின் முயற்சிக்கு அடுத்த வாரம் தெளிவான சமிக்ஞை கிடைக்கும் என்று, சனிக்கிழமையன்று தலைநகர் கீவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டா ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார்.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் அவர் நடத்திய பேச்சுக்கள் "எங்கள் மதிப்பீட்டை அடுத்த வார இறுதிக்குள் முடிக்க உதவும்" என்று உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) கூறினார்.
இதையும் படிங்க: மேற்கத்திய நாடுகள் அனுப்பிய ஆயுதங்களை அழித்த ரஷ்யா! உக்ரைன் மறுப்பு
கமிஷன் எப்போது தனது கருத்தை தெரிவிக்கும் என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பகிரங்கமாக நேரத்தை வழங்குவது இதுவே முதல் முறை.
கூட்டமைப்பின் 27 உறுப்பு நாடுகள் உக்ரைனை அணுகல் பேச்சுவார்த்தைகளை தொடங்க அனுமதிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
பிப்ரவரி 24-ஆம் திகதி ரஷ்யா படையெடுத்த சில நாட்களிலேயே, ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனின் விரைவான சேர்க்கைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். மேலும் இந்த மாத இறுதிக்குள் உக்ரைனின் உறுப்பினர் விண்ணப்பத்திற்கு பதில் தருமாறு கோரினார்.
இதையும் படிங்க: 30 மில்லியன் டன்... உக்ரைன் தானிய ஏற்றுமதி மீண்டும் கடும் சிக்கலில்
ஆனால் குழுவில் உள்ள அதிகாரிகளும் தலைவர்களும், வேட்புமனுத் தகுதியுடன் கூட, உண்மையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்கள் ஆகலாம் என்று எச்சரிக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வாய்ப்பை உக்ரைன் அதன் புவிசார் அரசியல் பாதிப்பைக் குறைப்பதற்கான ஒரு வழியாக பார்க்கிறது.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஜனாதிபதி ஜெலின்ஸ்கியுடன் ஊடகங்களில் தோன்றி ஒரு சுருக்கமான அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை.
ஜூன் 23-24 தேதிகளில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் உக்ரைனின் ஐரோப்பிய ஒன்றிய வேட்புமனுவின் நிலை, பச்சை நிறமாக இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் உள்ளன.
அதேசமயம், ஸ்வீடன், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து உட்பட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் ஒப்புதலை வழங்க தயங்குகின்றன மற்றும் ஜேர்மனி அதன் நிலைப்பாட்டை இன்னும் அமைக்கவில்லை.