ரஷ்யாவுக்குள் நுழைந்து ரஷ்ய வீரர்களை அடிபணியவைத்த உக்ரைன்: அச்சத்தில் அவசர நிலை பிறப்பித்த ரஷ்யா
உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள்ளேயே நுழைந்து, ரஷ்ய வீரர்களை அடிபணியவைத்ததால் ரஷ்ய தரப்பு கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
வேறு வழியில்லாமல், குறிப்பிட்ட பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்குள்ளேயே நுழைந்த உக்ரைன் படைகள்

Image: Kremlin POOL/UPI/REX/Shutterstock
ரஷ்யாவின் எல்லையில் அமைந்துள்ள Kursk பகுதிக்குள் அதிரடியாக நுழைந்த உக்ரைன் படைவீரர்களிடம், ரஷ்யப் படைவீரர்கள் சரணடையும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ரஷ்ய கவச வாகனங்களை உக்ரைன் தரப்பு தவிடு பொடியாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவிவருகின்றன.
அச்சத்தால் அவசர நிலை பிறப்பிப்பு
போரில் முதன்முறையாக உக்ரைனின் கை ஓங்கியிருப்பதால் ரஷ்ய தரப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், Sudzha என்னும் இடத்துக்குள் உக்ரைன் வீரர்கள் நுழைந்துள்ளதால் ரஷ்ய தரப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே Kursk பகுதி ஆளுநரான Alexei Smirnov அவசர நிலை பிறப்பித்துள்ளார்.

Image: Image: Getty
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |