ரஷ்ய தலைநகர் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குண்டு மழைக்கு கொடுக்கப்பட்ட பதிலடி: வீடியோ
உக்ரைன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் அதிரடியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைனிய தலைநகர் கீவ் மீது 3 நாட்களாக ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நள்ளிரவு ட்ரோன் தாக்குதல்களை அரங்கேற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட பயங்கர வெடி சத்தத்தை கேட்டதாக மாஸ்கோவில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Moscow is under massive drones attack.
— Ukraine Front Lines (@EuromaidanPR) May 30, 2023
Witness; “…maybe better to get out of here, they are getting closer and closer..” pic.twitter.com/25zMDZRL7m
அத்துடன் மேயர் செர்ஜி சோபியானின், இந்த தாக்குதலில் கட்டிடம் ஒன்று சேதமடைந்து இருப்பதாகவும், ஆனால் யாருக்கும் தீவிரமான காயங்கள் ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இரண்டு கட்டிடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ கவர்னர் ஆண்ட்ரி வோரோபியோவ் வழங்கிய தகவலில், மாஸ்கோ மீதான தாக்குதலில் களமிறக்கப்பட்ட ட்ரோன்களில் சிலவற்றை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Ukrainian drone attack on residential buildings in Moscow.
— Jackson Hinkle ?? (@jacksonhinklle) May 30, 2023
Ukraine is a terrorists state. pic.twitter.com/DFyVJk91BW
இந்நிலையில், ரஷ்யாவின் மீது நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதலை உக்ரைன் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மாஸ்கோ மீதான இரண்டாவது தாக்குதல்
போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது நடத்தப்படும் இரண்டாவது ட்ரோன் தாக்குதல் ஆகும்.
இதற்கு முன்பாக மே 3ம் திகதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை குறிவைத்து அவரது மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
#WATCH | Russia today alleged that there were attempts by Ukraine to assassinate President Putin, saying it was a "terrorist attack" while claiming it shot down drones over the residence of Putin
— ANI (@ANI) May 3, 2023
(Video: Russia's RT news) pic.twitter.com/6b7jkeYluT
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், “நாங்கள் ரஷ்ய ஜனாதிபதி புடினையோ அல்லது மாஸ்கோவையோ தாக்கவில்லை” உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்து இருந்தார்.
Shutterstock/AP/Getty