சுமார் 50 கிமீ முன்னேறி...ரஷ்யாவிடம் இருந்து 20 கிராமங்களை விடுவித்தது உக்ரைன்!
ரஷ்ய படைகளிடம் இருந்து 20க்கும் மேற்பட்ட கிராமங்களை மீட்டெடுத்தது உக்ரைன்.
சுமார் 700 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பகுதியை மீண்டும் கைப்பற்றியதாக தகவல்.
ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த கார்கிவ் பகுதி அருகே உக்ரைனிய படைகள் 50 கிமீ முன்னேறி 20க்கும் மேற்பட்ட கிராமங்களை மீட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதலில் உக்ரைனிய படைகள் தெற்கு பகுதியான கெர்சனை நோக்கி வேகமாக முன்னேறி வந்த நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியில் அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் சிறப்பு அதிரடி தாக்குதல் நடத்தி பெரும் பகுதியை கைப்பற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.
HANDOUT VIA REUTERS
அதனடிப்படையில் தற்போது கார்கிவின் வடகிழக்கு பகுதியில் உள்ள உக்ரைனிய படைகள், ரஷ்யர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பெரும் பகுதியை உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக வாஷிங்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழு மற்றும் போர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் சந்தர்ப்பவாத மற்றும் மிகவும் பயனுள்ள எதிர்தாக்குதலை உக்ரைனிய படைகள் நடத்தியதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க போர் நிறுவனத்தின் இந்த கூற்றை உக்ரைன் ஜெனரல் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Sky News
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், கார்கிவ் பிராந்தியத்திலும், தெற்கிலும் உக்ரைன் தனது நிலப்பரப்பில் 700 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளது என தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நிலை சரிவு: பால்மோரலில் கூடும் நெருங்கிய அரச குடும்பத்தினர்
அத்துடன் அதில் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் 50 கிமீ முன்னேறி 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை மீட்டெடுத்த-தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.