வேறுவகையில் பதிலடி கொடுக்க தயாராகும் உக்ரைன்! கோபத்துடன் காத்திருக்கும் ரஷ்யா
ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருவதாக உக்ரைன் கூறியுள்ளது.
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்
தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு, மாஸ்கோவின் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தி உக்ரைன் பதிலடி கொடுத்ததாக தகவல் வெளியானது.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் ஒவ்வொரு நாளும் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தான் உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford, கடந்த மே 24ஆம் திகதி நார்வே கடலை வந்தடைத்தது.
இக்கப்பல் அணுசக்தியில் இயக்கப்படுவதும், அணு ஆயுதத்தை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இது சுமார் 90 யுத்த விமானங்களையும், 4500 கடற்படையினரையும், பல்வேறு நவீன ஆயுதங்களையும் சுமந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தங்களை ரஷ்யர்கள் என்றுக் கூறிக்கொண்டிருக்கும் Freedom of russia legion and russian volunteer corps அணி, அந்நாட்டில் ஊடுருவி அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.
வாக்னர் படை வீரர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, படைத்தலைவர் Yevgeny Prigozhin கடுமையான வார்த்தைகளால் ரஷ்யா படைத்துறை தலைமை திட்டித் தீர்த்த வீடியோ வெளியானது.