”தொடர்ச்சியான குண்டுவெடிப்பு சத்தம்.. பாக்முட்டில் வாழ்வதற்கே போராடும் மக்கள்” உலக செஞ்சிலுவைச் சங்கம்
உக்ரைனின் பாக்முட் நகரில் மக்கள் இருப்பதற்கே இடமில்லாமல் போராடி வருகின்றனர் என உலக செஞ்சிலுவைச் சங்கம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது.
அதிகாரத்தின் போர் வன்முறை
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக உக்ரைன் நாட்டை ஆக்கிரமித்து வருகிறது. இருப்பினும் உக்ரைன் தரப்பும் கடுமையாக எதிர்த்து சண்டையிட்டு போராடுகிறது.
@Reuters
இப்போரினால் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் வாழவே மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் குடியிருப்புகள் இடிபாடுகளுக்கு உள்ளாகி பலரும் வேறு நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர். அதிகாரத்திற்காக ரஷ்யா நடத்தும் இப்போரால் எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எப்போது குண்டு வெடிக்கும் என பயந்து கொண்டே ஒவ்வொரு இரவையும் கழிக்கிறார்கள்.
@Reuters
ஒரு குழந்தை போரில் கொல்லப்படும்போது தான் எதற்காக இறக்கிறோம் என தெரியாமலே இறந்து போகிறது. அந்த உலகமறியா குழந்தைக்கு போரைப் பற்றி ஒன்றும் தெரியப் போவதில்லை.
பாக்முட்டில் வாழும் மக்கள்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடக்கும் போரில் பாக்முட் நகரை கைப்பற்றுவது ரஷ்யாவிற்கு பெரும் குறிக்கோளாக உள்ளது.
ஏற்கனவே சில பகுதிகள் ரஷ்யா ராணுவம் கைப்பற்றினாலும் மொத்தமாக பாக்முட் நகரைக் கைப்பற்றுவது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதனால் நள்ளிரவில் கூட குண்டு மலைகளை பொழிந்து கட்டிடங்களைத் தாக்குகிறது.
@Reuters
சில தினங்களுக்கு முன்பு கூட ஆளில்லாத விமானம் மூலம் பள்ளி கட்டிடத்தைத் தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். போரில் உண்டான இழப்புகளைப் பற்றி அறிய உலக செஞ்சிலுவை சங்கம் கள ஆய்வு செய்ய அந்நாட்டுக்குச் சென்றுள்ளது.
தொடர்ச்சியான அச்சுறுத்தல்
பாக்முட் நகரில் தான் கண்ட அழிவின் அளவைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக செஞ்சிலுவைச் சங்கத்தை சேர்ந்த கான் என்பவர் கூறியுள்ளார்.
"இராணுவ துப்பாக்கிச் சூடுகளால் வீடுகள் நசுக்கப்படுகின்றன, அடுக்குமாடி கட்டிடங்கள் துளைகளால் சிதறிக்கிடக்கின்றன ... குண்டுகள் வெடிக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் - இன்னும் சிலர் இந்த கடுமையான விரோதங்களிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் முகாம்களில் வாழ்கின்றனர்." என கான் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
@Reuters
ஐ.நா., போரில் உரிமை மீறல்கள் பற்றிய அதன் சமீபத்திய அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறப்புகளை உறுதிப்படுத்துகிறது.
அத்துடன் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் பெரும்பாலும் உக்ரேனியர்கள் காணாமல் போனது, சித்திரவதை மற்றும் கற்பழிப்பு போன்றவை நடைபெற்றிருந்தாலும் ரஷ்யா அக்குற்றச்சாட்டை மறுக்கிறது.