எதிர்த்தாக்குதலை துல்லியமாக நடத்திய உக்ரைன்! கோட்டை விட்டதை மீண்டும் பிடித்து ரஷ்யாவிற்கு பதிலடி
ரஷ்யா வசம் சென்ற முக்கியமான 3 பகுதிகளை மீண்டும் கைப்பற்றிய உக்ரைன்.
போர் களத்தில் திறமையாக செயல்பட்ட வீரர்களுக்கு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நன்றி.
உக்ரைனில் உள்ள முக்கியமான 3 பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் உக்ரைன் வீரர்கள் மீட்டு அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 6 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை மீட்க, கடந்த வாரம் உக்ரைனின் எதிர்த்தாக்குதல் தொடங்கியது.
Marcus Yam / Los Angeles Times
அதில் தங்கள் நாட்டு படைகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஜெலன்ஸ்கி நேற்று தெரிவித்தார். நேற்றிரவு வீடியோ மூலம் ஆற்றிய உரையில் அவர் உக்ரைனின் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும், கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும், கிழக்கில் கூடுதலாக ஒரு நிலப்பரப்பையும் கைப்பற்றியதற்காக தனது படைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு குடியேற்றத்தை ரஷிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்ததற்காக தனது படைகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.ஆனால், அவை எந்தெந்த இடங்கள் அல்லது எங்கே என்பதை அவர் துல்லியமாக கூறவில்லை.