உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்! தலைநகர் மீது குறி..மூவர் பலி
ரஷ்ய தலைநகர் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 44 ட்ரோன்களை அழித்ததாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் மீது பாரிய தாக்குதல்
உக்ரைன் மார்ச் மாதத்திற்குப் பிறகு ரஷ்ய தலைநகர் மீது பாரிய தாக்குதலை நடத்தியது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
நகர மேயர் செர்ஜி சோபியனின் இதுகுறித்து கூறும்போது, திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை மாஸ்கோவை நெருங்கும்போது, ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் குறைந்தது 44 உக்ரேனிய ட்ரோன்களை அழித்தன என்றார்.
மேலும் அவர், இடிபாடுகள் விழுந்த இடங்களுக்கு அவசர சேவைகள் அனுப்பப்பட்ட போதிலும், உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
வான் பாதுகாப்புப் படைகள்
திங்கட்கிழமை பிற்பகல் முதல் நள்ளிரவு வரை மாஸ்கோ, கிரிமியா மற்றும் கருங்கடல் பகுதி உட்பட 8 பிராந்தியங்களில் 81 உக்ரேனிய ட்ரோன்களை, அதன் வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
அதேபோல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் காலை 7 மணி வரை, மேலும் 69 ட்ரோன்களை இடைமறித்ததாகவும் தெரிவித்தது.
இதற்கிடையில், ரஷ்யாவின் பாரிய விமான நிலையமான Sheremetyevoயில் விமானங்கள் திங்கட்கிழமை மாலை சுமார் நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 100 விமானங்கள் விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |