வடக்கு எல்லையில் ரஷ்யாவின் சதிச்செயல்... முறியடித்து விரட்டிய உக்ரைன்
இரவோடு இரவாக உக்ரைனின் வடக்கு எல்லையை கடக்க முயற்சித்த ஒரு ரஷ்ய நாசகார குழுவின் சதிச்செயலை முறியடித்துள்ளதாக உள்விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாசகார குழுவின் முயற்சி
உக்ரைன் உள்விவகார அமைச்சர் Ihor Klymenko தமது டெலிகிராம் செயலியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். செர்னிஹிவ் பிராந்தியத்தில் உக்ரைன் மாகாண எல்லையை கடக்க ஒரு எதிரி நாசகார குழுவின் முயற்சியை எல்லைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர் என அவர் பதிவு செய்துள்ளார்.
@ TASS
ராணுவ தளபதி ஒருவர் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், ஆயுதம் ஏந்திய நான்கு பேர் எல்லையை கடக்க முயன்றனர், ஆனால் உக்ரேனிய துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் விரட்டப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், உள்விவகார அமைச்சர், அந்த நால்வரும் கைதாகியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். மட்டுமின்றி, சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
@AFP
பெலாரஸில் வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் வருகையைத் தொடர்ந்து உக்ரைன் அதன் வடக்கு எல்லையை பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |