புடினுக்கு மாற்றாக ஜனாதிபதியாக துடிக்கும் ரஷ்ய அதிகாரிகள்: உளவுத்துறை தலைவர் தகவல்
ரஷ்ய ஜனாதிபதி புடினை மாற்ற கிரெம்ளின் அதிகாரிகள் விருப்பம்.
கிரியென்கோ ஜனாதிபதி நாற்காலியில் தன்னை வைத்து பார்க்கிறார் என உளவுத்துறை தலைவர் தகவல்.
ரஷ்ய ஜனாதிபதி புடினை மாற்ற கிரெம்ளின் அதிகாரிகள் விரும்புவதாக உக்ரைன் ராணுவ புலனாய்வுத் தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ராணுவ புலனாய்வுத் தலைவர் கைரிலோ புடானோவ் உக்ரைன் நாட்டுப் பத்திரிகையான உக்ரைன்ஸ்கா பிராவ்தாவுக்கு (Ukrainska Pravda) அளித்த பேட்டி ஒன்றில் ஷ்யாவின் பதற்றமான இராணுவப் பிரச்சாரத்திற்கு மத்தியில் கிரெம்ளினில் தற்போது நிலவும் அதிகாரப் போட்டி பற்றி பேசினார்.
அப்போது ரஷ்ய ஜனாதிபதி புடினை மாற்ற கிரெம்ளின் அதிகாரிகள் விரும்புவதாக தெரிவித்தார்.
Getty Images
அத்துடன் விளாடிமிர் புடினின் சாத்தியமான வாரிசாக முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் வாய்ப்புகளை நிராகரித்தார், இருப்பினும் முன்னாள் FSB தலைவர் நிகோலாய் பட்ருஷேவின் மகன் டிமிட்ரி பட்ருஷேவ் ஜனாதிபதியாக பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், உக்ரேனிய பிரதேசங்களை இணைக்கும் கிரெம்ளினின் கொள்கையின் சிற்பியாக பரவலாகக் கருதப்படும் செர்ஜி கிரியென்கோ, புடினுக்கு மாற்றாக உருவெடுக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கிரியென்கோ ஜனாதிபதி நாற்காலியில் தன்னைப் பார்க்கிறார் என்று உக்ரைன் ராணுவ புலனாய்வுத் தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரிஷி சுனக் பிரதமரான சில மணிநேரங்களில்…பிரித்தானியாவில் அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அமைச்சர்கள்
ஆனால் கிரெம்ளினின் முதல் துணைத் தலைவர் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி ஏற்கனவே இருக்கும் தலைவரை வலுக்கட்டாயமாக பதவி நீக்கம் செய்ய முற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.