அணு ஆயுதங்களுடன் உக்ரைனை நோக்கி வரும் ரஷ்ய ரயில்: நிபுணர்கள் எச்சரிக்கை...
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ரஷ்ய ரயில் ஒன்று உக்ரைன் எல்லையிலிருந்து 300 முதல் 400 மைல் தொலைவில் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த விடயத்தை உறுதி செய்துள்ள முன்னாள் பிரித்தானிய இராணுவ உளவுத்துறை அலுவலர் ஒருவர், அணு ஆயுத தாக்குதல் தொடர்பான தகவல்களை எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்று கூறியுள்ளார்.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ரஷ்யாவுக்குச் சொந்தமான ரயில் ஒன்று உக்ரைனை நோக்கி வருவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த ரயில், ரஷ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் படைப்பிரிவுக்குச் சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ரயில், உக்ரைன் எல்லையிலிருந்து 300 முதல் 400 மைல் தொலைவில் காணப்படுகிறது.
?? Another railroad train with military equipment going to the front line by rail somewhere in central Russia. pic.twitter.com/3g3nWhTEtT
— Rybar in English (@rybar_en) October 2, 2022
இந்த விடயத்தை உறுதி செய்துள்ள முன்னாள் பிரித்தானிய இராணுவ உளவுத்துறை அலுவலரான Forbes McKenzie, மேற்கத்திய நாடுகளை எச்சரிப்பதற்காக ரஷ்யா இதைச் செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்.
ஆனாலும், இப்படி அணு ஆயுத தாக்குதல் தொடர்பான தகவல்களை எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.