எனது நண்பர் ரிஷி சுனக்கை சந்திக்க போகிறேன்! பிரித்தானியாவிற்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திடீர் பயணம்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிடம் கூடுதலான ஆயுத உதவி கோரி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பிரித்தானியாவிற்கு திடீர் பயணம் செய்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 15 மாதங்களாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் இருநாடுகளும் முன்னெடுக்கவில்லை.
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட ஆயுத உதவி கோரி ஐரோப்பிய நாடுகளுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
It was another powerful day for our defense, for our international positions.
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 14, 2023
I thank Mr. President Frank-Walter Steinmeier, Mr. Chancellor Olaf Scholz @Bundeskanzler and the German ?? people for the powerful defense package, for their leadership in defending lives from Russian… pic.twitter.com/NYSDdC2u4h
கடந்த வாரம் வாடிகன் சென்று இருந்த ஜெலென்ஸ்கி, போப் பிரான்சிஸை சந்தித்து உக்ரைனுக்கான ஆதரவை கோரி இருந்தார்.
அதன் பிறகு இத்தாலி, ஜேர்மனி போன்ற நாடுகளுக்கும் சென்ற ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உக்ரைனுக்கான கூடுதல் ஆயுத உதவி குறித்த கோரிக்கைகளை முன்வைத்து அந்தந்த நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து ஜேர்மனி 2.4 பில்லியன் பவுண்ட் இராணுவ உதவிவை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக அறிவித்தது.
Dimitar Dilkoff/AFP via Getty Images
ரிஷி சுனக்குடன் சந்திப்பு
போரின் இக்கட்டான நிலையில், ஆயுத உதவி கோரி முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி யாரும் எதிர்பாராத விதமாக இன்று பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், “உக்ரைனின் பலத்தை வானிலும் மண்ணிலும் விரிவுபடுத்துவதில் பிரித்தானிய முதன்மையில் உள்ளது. உக்ரைனுக்கான பிரித்தானியாவின் இந்த ஒத்துழைப்பானது இன்று வரை தொடர்கிறது”.
Today – London. The UK is a leader when it comes to expanding our capabilities on the ground and in the air. This cooperation will continue today. I will meet my friend Rishi. We will conduct substantive negotiations face-to-face and in delegations.
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 15, 2023
“நான் எனது நண்பர் ரிஷி சுனக்கை சந்திக்க இருக்கிறேன், நாங்கள் தீவிரமான நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனிய ஜனாதிபதியின் இந்த பிரித்தானியா சுற்றுப் பயணத்தின் மூலம் பிரதமர் ரிஷி சுனக்கிடம் கூடுதலான ஆயுத உதவி கோரி ஜெலென்ஸ்கி முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Andrew Matthews/WPA Pool/Getty Images