400 டொலர் செலவில் ரஷ்யாவுக்கு 7 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்திய உக்ரைன்
உக்ரைன் நடத்திய ஆபரேஷன் ஸ்பைடர்வெப் (Operation Spiderweb) என்னும் அதிரடி நடவடிக்கை, 2025 ஜூன் 1 அன்று ரஷ்யாவின் விமான தளங்களை இலக்காகக் கொண்டு மிகப்பாரிய தாக்கமாக அமைந்தது.
100-க்கும் மேற்பட்ட FPV ட்ரோன்கள் ரஷ்யாவின் 5 மண்டலங்களில் உள்ள விமானத் தளங்களை தாக்கின.
இதில் Tu-95, Tu-22M3, மற்றும் A-50 போன்ற முக்கிய ராணுவ விமானங்கள் சேதமடைந்தன.
இந்த தாக்குதலில் சுமார் 41 விமானங்கள் சேதமடைந்து, ரஷ்யாவிற்கு மொத்தம் $7 பில்லியனுக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பீடு செய்யப்படுகிறது.
இந்த அதிரடி நடவடிக்கை 18 மாத திட்டமிடலுக்குப் பின்னர் சாத்தியமானதாகும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். ட்ரோன்கள், ரஷ்யாவின் FSB அலுவலகம் அருகிலுள்ள ரகசிய இடத்திலிருந்து இயக்கப்பட்டன.
ட்ரோன்கள் மரத்தின் மீது அமைக்கப்பட்ட குடிசைகள் போல கட்டப்பட்ட டிரக்குகளில் பதுக்கப்பட்டிருந்தன. அந்தக் குடிசைகள் மேலிருந்து திறந்து ட்ரோன்கள் புறப்பட்டன.
குறைந்த செலவில், மிகப்பாரிய தாக்கத்தை உண்டாக்கிய இந்த தாக்குதல், நவீன போர் யுக்திகளில் ட்ரோன்களின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.
அத்துடன், Tu-95 மற்றும் Tu-22M3 போன்ற பழைய விமானங்களை மாற்ற முடியாத நிலை ரஷ்யாவின் வலுவை மட்டுப்படுத்துகிறது.
இந்த தாக்குதலால், அணுஆயுத தடுப்பு வலையமைப்பிலும் ரஷ்யாவுக்கு நம்பிக்கையிழப்பு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Operation Spiderweb Ukraine, Ukraine drone attack Russia, FPV drones strike Tu-95, Russia air base drone attack, Ukraine 500 dollar drone vs 7 Billion dollar aircraft, Operation Spiderweb damage, Ukraine drone war 2025, Tu-22M3 bomber destroyed, Russia air defence failure, Zelenskyy drone operation