பிரித்தானியரால் கைவிடப்பட்ட உக்ரைன் அழகி: நாடு திரும்பும்போது சந்தித்த திகில் அனுபவங்கள்...
பிரித்தானியரால் கைவிடப்பட்ட உக்ரைன் அழகி, உக்ரைனுக்கே திரும்பிவிட்டார்.
அவர் வழியில் சந்தித்த திகில் அனுபவங்களை பிரித்தானிய ஊடகம் ஒன்றுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
உக்ரைன் அகதி ஒருவருக்காக தன் துணைவியைக் கைவிட்ட பிரித்தானியர், நான்கே மாதங்களில் அந்த உக்ரைன் பெண்ணையும் கைவிட, மனமுடைந்த அவர் உக்ரைனுக்கே திரும்பிவிட்டார்.
ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து உயிர் தப்ப பிரித்தானியாவுக்கு ஓடி வந்த சோபியா (Sofiia Karkadym, 22) என்ற அழகான உக்ரைன் இளம்பெண்ணுக்கு, Bradfordஇல் வாழும் டோனி (Tony Garnett, 29) மற்றும் அவரது துணைவியான லோர்னா (Lorna), தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள்.
ஆனால், சோபியாவுக்காக லோர்னாவைக் கைவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் டோனி. நான்கே மாதங்களில் காதல் கசக்க, சோபியாவையும் கைவிட்டார் அவர்.
பிரித்தானியாவில் வாழ்நாள் முழுவதையும் செலவிடலாம் என்று ஆசைகளை வளர்த்துக்கொண்ட சோபியா, மனமுடைந்து உக்ரைனுக்கே திரும்பிவிட்டார்.
தற்போது, உக்ரைனிலுள்ள Kolomyia என்ற இடத்தில் தன் பாட்டியாருடன் தங்கியிருக்கிறார் சோபியா.
Credit: Enterprise
இந்நிலையில், தான் உக்ரைனுக்குத் திரும்பும்போது கண்ட காட்சிகளை விவரித்துள்ளார் அவர்.
சோபியா சரியாக உக்ரைனிலுள்ள Lviv நகரை வந்தடையவும், ரயில் நிலையத்தில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத் துவங்கியுள்ளது. அவரும் அவருடன் இருந்த மக்களும் ரஷ்யர்கள் தாக்குகிறார்களோ என கலவரமடைந்திருக்கிறார்கள்.
அத்துடன் பேருந்தில் பயணிக்கும்போது, உக்ரைன் வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கையும் கண்டுள்ளார் சோபியா. தன் நாட்டின் போர்ச்சூழலைக் காணும்போது, நிச்சயம் அவரது மனம், தான் நிம்மதியாக பிரித்தானியாவில் செலவிட்ட குறுகிய காலத்தையாவது நினைவூட்டியிருக்கக்கூடும். தன்னையறியாமலே தன் கண்கள் கண்ணீரைச் சொரிய ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார் அவர்.
Credit: LNP
இதற்குப் பின், கீவ்வில் வாழும் தன் தாயையும் சகோதரியையும் காணச் செல்கிறாராம் சோபியா. ஆனால், அவரது பாட்டியாரோ, ரஷ்யா கீவ்விலுள்ள அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் சோபியாவின் பயணம் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என அஞ்சுகிறார்.
சோபியாவுக்கு ஒரே ஆறுதல், இப்போது தன் தாய்நாட்டில், தன் தாய்மொழியில் தன்னால் பேச முடிகிறதே என்பதுதான்.
அவர் பிரித்தானியாவில் டோனி வீட்டில் தங்கியிருந்தபோது, அங்கு யாருக்கும் உக்ரைன் மொழி தெரியாது. டோனிக்கு ஸ்லோவேகியா மொழி தெரியும். அதுவும் உக்ரைனிய மொழி போன்றது என்பதால், டோனியும் சோபியாவும் அந்த மொழியில்தான் பேசி காதல் வளர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.