ரஷ்யா முழுவதும் தொழில்துறை தளங்களை குறிவைத்து தாக்கிய உக்ரேனிய ட்ரோன்கள்
கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யா முழுவதும் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரேனிய ட்ரோன்கள்
உக்ரைன் போர் முனையில், எரிபொருளுடன் சென்ற ரஷ்ய ரயில் ஒன்றை உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இரவு முழுவதும் 96 உக்ரேனிய ட்ரோன்களையும், திங்கட்கிழமை காலை பல பிராந்தியங்களில் 12 ட்ரோன்களையும் சுட்டுவீழ்த்தியதாக கூறியது.
இவை ரஷ்யா முழவதும் உள்ள தொழில்துறை தளங்களை குறிவைத்து தாக்கப்பட்ட ட்ரோன்கள் என கூறப்பட்டுள்ளது.
எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை
மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், தலைநகர் அருகே குறைந்தது 10 ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும், மாஸ்கோ அல்லது பிற பிராந்தியங்களில் நடந்த தாக்குதல்களில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
குறிப்பாக, டாடர்ஸ்தான் குடியரசில் உக்ரைனின் எல்லையில் இருந்து 1,000 கிலோ மீற்றர் தொலைவில், யெலபுகா அருகே வான் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நகரம் அலபுகா தொழில்துறை மண்டலத்தின் தாயகமாகும். அங்கு ரஷ்ய இராணுவத்திற்கான ஒரு முக்கிய ட்ரோன் Supplier அமைந்துள்ளது.
அலபுகா தொழில்துறை மண்டலம் கடைசியாக, ஏப்ரல் 2024யில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது.
இதற்கிடையில், மாஸ்கோ உட்பட பல நகரங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் விமானங்களை விமான அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |