சாண்டா உடையில் உக்ரேனிய போர் விமானி., ரஷ்ய இலக்குகளை தாக்கிய காட்சி
உக்ரேனிய போர் விமானி ஒருவர் சாண்டா உடையில் ரஷ்ய இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை வீசினார்.
உக்ரைனின் MiG-29 போர் விமானம் ரஷ்ய இலக்குகளை நோக்கி ஏவுகணையை வீசும் சமீபத்திய வீடியோ ஒன்று வைரலானது. உக்ரேனிய ராணுவத்தால் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், சான்டாவைப் போல் உடையணிந்த ஒரு போர் விமானி, அமெரிக்காவின் AGM-88 HARM air-to-surface கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளுடன் தாக்குதல் நடத்துவதைக் காட்டுகிறது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் கமெண்டுகளில், ஒரு பயனர் "ஓ அதனால்தான் எனக்கு பரிசுகள் எதுவும் கிடைக்கவில்லை. சாண்டாவுக்கு அதைவிட முக்கியமான வேலை இருக்கிறது, கோ சாண்டா!" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றோருவர், "ரஷ்ய இராணுவத்திற்கு கிறிஸ்துமஸ் பரிசை வழங்கப் போகும் சாண்டாவிற்கும் சில குறுக்கீடுகள் இருப்பது போல் தெரிகிறது" என்று கூறினார்.
"சாண்டாவுடன் வம்பு வைத்துக்கொள்ளாதீர்கள்" என்று மற்றோரு நபர் எழுதினார்.
"கிறிஸ்துமஸுக்குப் பிறகும் குறும்பு செய்தவர்களை சாண்டா இன்னும் தண்டிப்பதை நான் காண்கிறேன்" என்று இன்னொருவர் எழுதினார்.
இதற்கிடையில், போர் அடிப்படையிலான விளையாட்டுகள் (Video Games) உக்ரைன் போர் பற்றிய தவறான தகவல்களைத் தூண்டுகின்றன. AFP செய்து நிறுவனத்தின் அறிக்கையின்படி, போர் பின்னணியிலான Arma 3 வீடியோ கேமங் காட்சிகள், பெரும்பாலும் "நேரடி" அல்லது "உண்மையான செய்தி" எனக் குறிக்கப்பட்டு, உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் பற்றிய போலி வீடியோக்களில் சமீபத்திய மாதங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
சில ஊடக ஒளிபரப்பாளர்களால் கூட கேமிங் காட்சிகள் உண்மையானவை என தவறாகக் கருதப்பட்டு, சமூக ஊடகங்களில் உண்மையான செய்திகளாகப் பகிரப்படும் அதிர்வெண் மற்றும் எளிமை ஆகியவை, தவறான தகவல்களைப் பரப்புவதற்கான தீவிர சாத்தியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை எடுத்துக்காட்டுகிறது.