ரஷ்யாவின் குடியுரிமைக்கு உக்ரைனிய மக்கள் இதனை செய்ய வேண்டும்: TASS தகவல்!
உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மக்கள் ரஷ்யாவில் வசிப்பதற்கும், வேலை செய்வதற்கும், ஆவணங்களை பெறுவதற்கும் கைரேகை, புகைப்படம் மற்றும் கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் கிழக்குப் பகுதியான டான்பாஸை ரஷ்ய படைகள் முழுவதுமாக சுகந்திர பகுதிகளாக மாற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களை ரஷ்ய குடிமக்களாக மாற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்தது.
இதுத் தொடர்பாக ரஷ்யாவின் உள் அமைச்சக செய்தி மையம் ஞாயிற்றுக்கிழமை TASS செய்தியிடம் தெரிவித்துள்ள தகவலில், உக்ரைன் மக்கள் ரஷ்யாவின் குடியுரிமை பெற விரும்பும் விண்ணப்பதாரிகள் கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல் மற்றும் சுயசரிதைத் தரவைக் கேள்வி கேட்பது தொடர்பான நிர்வாக நடைமுறைகள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் மீது கொப்பளிக்கும் தீ மழை தாக்குதல்: பரபரப்பு வீடியோ!
விண்ணப்பதாரர்களிடம் அனைத்து அடையாள ஆவணங்களும் இல்லாத சந்தர்ப்பங்களில், சிக்கலான சூழ்நிலையில் நாட்டிற்கு வந்த நபர்களுக்கு உதவ பல பிராந்தியங்களில் செயல்பாட்டு தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ரஷ்ய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டது.