முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தாரை கொலை செய்துவிடுவோம் என்ற மிரட்டலால் பரபரப்பு!
முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 இடங்களுக்குள் இருப்பவர் ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சுமார் 12.57 மணிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.
அப்போது, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் மர்ம நபர் எச்சரித்துள்ளார்.
Vogue Images
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மும்பை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 15 அன்று ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு இதேபோன்ற அழைப்பு வந்தது.
இதையடுத்து நபர் ஒருவர் இது தொடர்பில் அப்போது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.