கண்ணில் சிக்காத டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல்: குப்பை களத்தை கண்டுபிடித்த அமெரிக்க கடலோர காவல் படை
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் குப்பை களங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட குப்பை களங்கள்
டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளது.
இதையடுத்து காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த கப்பல்கள், விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி வாகனங்கள் போன்றவை களமிறக்கப்பட்டு தேடுதல் வேட்டை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டைட்டானிக் கப்பலின் அருகே உள்ள சுற்றுப் பகுதியில் சிதைந்த குப்பை களங்களை நீர்மூழ்கி வாகனங்கள் கண்டுபிடித்து இருப்பதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளார்.
மேலும் அவை எத்தகைய குப்பை களம் என்பது குறித்து நிபுணர்கள் ஆராய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிருடன் இருப்பது சிரமம்
அமெரிக்க கடலோர காவல் படையின் கணிப்பின் படி காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் ஆக்சிஜன் இருப்பு பிரித்தானிய நேரப்படி வியாழக்கிழமை 12.08 மணியளவில் தீர்ந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நீர்மூழ்கி கப்பலில் உள்ள 5 பேரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
அட்லாண்டிக் கடலின் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் அமெரிக்காவின் ஓஷன்கேட் என்ற நிறுவனத்தால் இயக்கப்பட்டுள்ளது, இதில் பிரித்தானிய கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங், பிரித்தானிய தொழிலதிபர் ஷாஜதா தாவூத் அவரது மகன் சுலோமான் தாவூத், அமெரிக்காவை சேர்ந்த ஓஷன்கேட்டின் தலைமை நிர்வாகி ஸ்டாக்டன் ரஷ் மற்றும் பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் பைலட் பால்-ஹென்றி ஆகிய 5 பேர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |