வானில் இருந்து கொட்டிய அமெரிக்க டொலர்கள்! வைரலாகும் வீடியோ
செக் குடியரசு நாட்டில் நடிகர் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து அமெரிக்க டொலர்களை வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பணத்தை வீசிய நடிகர்
செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான கமில் பார்டோசெக் என்பவர் வானில் இருந்து பணத்தை வீசியுள்ளார்.
இவர், ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை கீழே மக்களுக்கு வீசியுள்ளார். அப்போது, பணம் கொட்டும் இடங்களில் வந்து பொதுமக்கள் பலரும் தான் கொண்டு வந்திருந்த பைகளிலும், கைகளிலும் பணத்தை எடுத்துச் சென்றனர்.
பணமழை வீடியோ
வானில் இருந்து பண மழை பொழியும் வீடியோவை கமில் பார்டோசெக் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
¡Sorpresas millonarias! ?#Insólito || La estrella de televisión checa, #KamilBartoshek, lanzó un millón de dólares desde un helicóptero a un grupo de personas. pic.twitter.com/nBJYsSjOKu
— Pleno Informativo (@PlenoInfoSV) October 24, 2023
இந்த வீடியோவில் பொதுமக்கள் அனைவரும் போட்டி போட்டு பணத்தை எடுக்க முயலுகின்றனர். இவரின் இந்த செயலை பார்த்த பலரும் அவரது கொடுக்கும் மனப்பான்மையை பாராட்டினாலும், ஒரு சிலர் பணத்தை வீணடிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |