இந்திய ஐடி துறைக்கு பாரிய ஆபத்து - அமெரிக்காவின் HIRE மசோதாவால் சிக்கல்
அமெரிக்காவின் புதிய HIRE மசோதாவால், இந்திய ஐடி நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது.
அவுட்சோர்சிங் துறையின் உலகளாவிய மையமாக இந்தியா விளங்குகிறது. TCS, விப்ரோ, இன்போசிஸ் போன்ற முக்கிய இந்திய நிறுவனங்கள், 50-65% வருவாயை அமெரிக்க வாடிக்கையாளர்களிடமிருந்தே பெறுகின்றது.
HIRE மசோதா
இந்நிலையில், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள (சர்வதேச வேலைவாய்ப்பு இடமாற்றத்தை நிறுத்துதல்) HIRE மசோதா, இந்தியாவின் 283 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஐடி துறைக்கு ஆபத்தை ஏற்படுத்த உள்ளது.
ஓஹியோ குடியரசுக் கட்சி செனட்டர் பெர்னி மோரேனோ என்பவரால் இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக டிரம்ப்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ, அமெரிக்காவின் அவுட்சோர்சிங் வேலைகளுக்கு வரி விதிக்க வேண்டும் என பரிந்துரைத்தார்.
அந்த பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மசோதா, உள்ளூர் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும், வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க நிறுவனம் அவுட்சோர்சிங் அளிக்கப்பட்டு, அந்த சேவையை அமெரிக்க மக்களுக்கு பயன்படுத்தினால், அதில் அமெரிக்கா நிறுவனத்திற்கு கிடைக்கும் வருவாயில் 25 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும் என மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தாலும், மசோதா சட்டமாக்கப்பட்டால் இந்திய ஐடி நிறுவனங்கள் பாரிய இழப்பை சந்திக்க கூடும்.
ஏற்கனவே AI ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் வேலை இழப்பை எதிர்கொண்டுள்ள ஐடி ஊழியர்களிடையே இந்த மசோதா கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |