தைவான் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை: ஜோ பைடன் உடனான சந்திப்பில் ஜி ஜின்பிங் தகவல்
எதிர்வரும் ஆண்டுகளில் தைவான் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் எண்ணம் எதுவும் சீனாவிடம் இல்லை என அந்நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க சுற்றுப்பயணம்
உக்ரைன்- ரஷ்யா போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் சீனா-தைவான் இடையிலான பதற்றம் என உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை தற்போது எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவின் தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
China and the U.S. have agreed to resume high-level interaction between the two countries' militaries. pic.twitter.com/P0DvJbXDXO
— NEXTA (@nexta_tv) November 16, 2023
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு (நவம்பர் 15) சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தைவான் மீது ராணுவ நடவடிக்கை
இந்த சந்திப்பின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எதிர்வரும் ஆண்டுகளில் தைவான் மீது எந்தவொரு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டமும் சீனாவிடம் இல்லை என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த பேச்சுவார்த்தையில், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ உயர்மட்ட தொடர்புகளை மீண்டும் தொடங்க ஒப்புக் கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய ஆக்கப்பூர்வமான சந்திப்பு பிறகு பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |