விடுமுறைக்கு சென்ற இடத்தில் மகன்களுடன் இறந்து கிடந்த தாய்! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
மெக்சிகோவில் விடுமுறைக்கு சென்றபோது தாய் மற்றும் மகன்கள் நச்சு வாயு தாக்கியதில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொடிய வாயு
அமெரிக்காவின் இல்லினாய்ஸை சேர்ந்த 40 வயது பெண் ப்ரெண்டா கோரியா. இவர் தனது இரண்டு மகன்களான லியோ (14), அர்மண்டோ (13) ஆகியோரை அழைத்துக் கொண்டு மெக்சிகோவிற்கு சென்றுள்ளார்.
விடுமுறைக்காக சென்ற ப்ரெண்டா மேற்கு-மத்திய மெக்சிகோவில் உள்ள மிக்கோவாகனில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக அவர்கள் மூவரும் கடந்த 2ஆம் திகதி இறந்துகிடந்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு ப்ரெண்டா பதிலளிக்காததால் கவலையடைந்துள்ளனர்.
இதனையடுத்து கொடிய வாயுவான கார்பன் மோனாக்சைடு கசிவால் ப்ரெண்டா மற்றும் இரண்டு மகன்களும் இறந்தது தெரிய வந்தது.
கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள்
ப்ரெண்டா குளியறையில் கண்டுபிடிக்கப்பட்டார். அதே நேரத்தில் அவரது மகன்கள் படுக்கைகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டனர் என அவரது மைத்துனி மிலேனா ம்ரோசெக் தெரிவித்தார்.
சோகம் நடந்த நேரத்தில் வீட்டில் வேறு யாரும் இல்லை, மேலும் மரணத்திற்கான காரணம் மெக்சிகோ அதிகாரிகளால் விசாரணையில் உள்ளது.
ப்ரெண்டாவின் குடும்பத்தினர் அவர்களின் உடல்களை தங்கள் நாட்டிற்கு கொண்டுவர விரும்பினர். ஆனால், நடந்து வரும் விசாரணையின் காரணமாக, மூவரின் உடல்களும் மெக்சிகோவிலேயே அடக்கம் செய்யப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |