ஐரோப்பிய நாட்டை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்! இருவர் பலியானதாக அதிர்ச்சி தகவல்
ரஷ்ய ஏவுகணைகள் போலந்து நாட்டில் ஏவப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
ஐரோப்பிய நாடான போலந்து நேட்டோவின் உறுப்பினராக அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து கிராமமான Przewodow-யில் ரஷ்ய ஏவுகணைகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தானியங்கள் காய்ந்து கொண்டிருந்த அந்த பகுதியில் ஏவுகணை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Twitter(@visegrad24)
ஆனால், போலந்தின் அரசு செய்தித் தொடர்பாளர் பியோட்டர் முல்லர் இந்த தகவலை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. எனினும் அவர், உயர்மட்ட தலைவர்கள் நெருக்கடி சூழ்நிலை காரணமாக அவசர கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்தார்.
Slawomir Kaminski/Agencja Wyborcza.pl/Agencja Gazeta
செவ்வாயன்று, உக்ரைனின் எரிசக்தி வசதிகளை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி, ரஷ்யா தனது இரண்டு ஏவுகணைகளால் தாக்கி, பரவலான இருட்டடிப்புகளை ஏற்படுத்தியது.
Alexander Ermochenko / Reuters