சிட்டாங்கில் இறங்கியுள்ள அமெரிக்க துருப்புகள்: இந்தியா, மியான்மரில் புவிசார் பதற்றம்
வங்காளதேசத்தின் முக்கிய துறைமுக நகரமான சிட்டகாங்கில் அமெரிக்க இராணுவத்தின் துருப்புகள் சமீபத்தில் இறங்கியுள்ளது.
இது இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் புவிசார் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் உள்ள Yokota விமானப்படைத் தளத்தைச் சேர்ந்த C-130J Super Hercules போக்குவரத்து விமானம், சிட்டகாங்கில் உள்ள Shah Amanat சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இது வங்காளதேசம்-மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடா பகுதியில் அமெரிக்காவின் ஈடுபாடு அதிகரிப்பதை காட்டுகிறது.
வங்காளதேசம் மற்றும் அமெரிக்கா இணைந்து, இந்த ஆண்டில் Operation Pacific Angel-25 மற்றும் Tiger Lightning-2025 ஆகிய இரண்டு கூட்டு பயிற்சிகளை நடத்தியிருந்தன.
இந்த பயிற்சிகள் உளவு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஓத்துழைப்புகளுடன் கூடியதாக இருந்தன.
கடந்த வாரம், மேலும் ஒரு அமெரிக்க படைப்பிரிவு அந்த பகுதியில் வந்ததாகவும், புதிய பயிற்சி நடவடிக்கைள் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, டாக்காவில் உள்ள ஹோட்டலில் அமெரிக்க Airborne அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்தது, வங்காளதேச பாதுகாப்பு அமைப்புகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷேக் ஹசீனாவை பிரேதமர் பதவியில் இருந்து அகற்ற அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாகவும், செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்க நலன்களுக்கு ஒப்படைக்க மறுத்ததற்காக அரசியல் அழுத்தம் அதிகரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்
இந்த நகர்வுகள், வங்காள விரிகுடா பகுதியில் அமெரிக்காவின் புவிசார் தாக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாகவும், இந்தியா மற்றும் மியான்மரின் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை சவாலுக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளன.

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US troops in chittagong, Banladesh India Myanmar tension, India US tension