கடல் நீரில் பாய்ந்த அமெரிக்க கடற்படை விமானம்: 9 பயணிகளின் நிலை என்ன?
அமெரிக்காவில் தரையிறங்க முயற்சித்த விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடல் நீரில் இறங்கி விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த விமானம்
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள ஓஹு தீவின் கெனோஹே கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமான தளம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த விமான தளத்தில் தரையிறங்க முயற்சித்த போயிங் போஸிடான் 8 ரக அமெரிக்க கண்காணிப்பு விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை தாண்டி சென்றது.
மேலும், வாஷிங்டனின் விட்பி தீவில் இருந்து 9 பயணிகளுடன் வந்த விமானம் எதிர்பாரதவிதமாக விமானம் கடல் நீரில் இறங்கி விபத்தில் சிக்கியது.
உயிர் சேதம் எதுவும் இல்லை
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, பயணிகள் அனைவரும் நீந்தி பத்திரமாக கரையேறினார்கள்.
மழை மற்றும் கருமேகங்களின் காரணமாக ஓடுபாதை விமானிக்கு தெளிவாக தெரியவில்லை, இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டு இருப்பதாக விமானப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
U.S Navy P-8A Poseidon overruns the runway and ends up in the water while landing at Kaneohe Bay Marine Corps Air Station in Hawaii. pic.twitter.com/OSrWJts6xO
— Breaking Aviation News & Videos (@aviationbrk) November 21, 2023
மேலும் விமானத்தில் இருந்து நச்சு பொருட்கள் ஏதேனும் நீரில் கலந்து விடாமல் இருப்பதற்காக கடலில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |