ரத்தம் சொட்ட சொட்ட மருமகள் தலையை துண்டாக வெட்டி மாமனார் பொலிசில் சரண்: பேரதிர்ச்சி சம்பவம்!
உத்திரப்பிரதேசத்தில் மருமகளின் தலையை வெட்டி, துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த மாமனாரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சண்டை போட்டுக் கொண்ட மருமகள்கள்
உத்தரப்பிரதேச மாநிலம், மாலிக்பூரைச் சேர்ந்தவர் ரகுவீர் சிங் (62). இவருடைய இளைய மகன் கௌரவ் சிங். இவர் ஃபரூகாபாத்தில் காவலாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா சிங் (28). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாமனார் ரகுவீர் சிங் வீட்டில் தன் இரு குழந்தைகளுடன் பிரியங்கா வசித்து வருகிறார்.
ரகுவீர் சிங்கின் மூத்த மகன் இறந்து போக, அவருடைய மனைவியும் அதே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், ரகுவீர் சிங் தன் கையில் ரத்தம் சொட்ட, சொட்ட மருமகளின் துண்டிக்கப்பட்ட தலையோடு காவல் நிலையத்திற்கு வந்தார். இதைப் பார்த்ததும் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக ரகுவீர் சிங்கிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
மருமகள் தலையை துண்டித்த மாமனார்
அந்த விசாரணையில், என் வீட்டில் இரு மருமகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வரும். சம்பவத்தன்று இரு மருமகள்களும் சண்டை போட்டனர். நான் இருவரையும் விலக்கி விட்டேன். உடனே இளைய மருமகள் பிரியங்கா என்னை கீழே தள்ளி விட்டார். இதனால், எனக்கு பலத்த அடிப்பட்டது.
இந்த ஆத்திரத்தில் நான் கோடாரியை எடுத்து வந்து பிரியங்காவை கொடூரமாக தாக்கினேன். பின்னர், அவர் தலையை துண்டாக வெட்டினேன். தலையோடு காவல் நிலையத்திற்கு வந்தேன் என்று வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட பிரியங்காவின் உறவினர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்ட மருமகள் பிரியங்காவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மாமனார் ரகுவீர் சிங் மற்றும் மகன் கௌரவ் சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |