உலக நாகரிகத்தை ஒழுங்குபடுத்துங்கள்! தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன்.. கவிஞர் வைரமுத்து
ட்விட்டரின் புதிய உரிமையாளராக மாறிய எலான் மஸ்க்
எலான் மஸ்கிற்கு தமிழகத்தில் இருந்து வாழ்த்து தெரிவிப்பதாக பதிவிட்ட கவிஞர் வைரமுத்து
ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்கிற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரின் புதிய உரிமையாளராக மாறியுள்ளார். 44 பில்லியன் டொலர்கள் ஒப்பந்தந்தத்தை முடித்த பின் ட்விட்டரை மஸ்க் வாங்கிய நிலையில் CEO பராக் அகர்வால், CFO நெட் செகல் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், 'ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே! இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். வலதுசாரி, இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால் பொய்ச் செய்திக்கும், மலிந்த மொழிக்கும், இழிந்த ரசனைக்கும் இடம்தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்' என தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின்
— வைரமுத்து (@Vairamuthu) October 29, 2022
புதிய அதிபர்
எலான் மஸ்க் அவர்களே!
இந்தியாவின்
தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன்
வலதுசாரி இடதுசாரி
இரண்டுக்கும்
ட்விட்டர் ஒரு களமாகட்டும்
ஆனால்,
பொய்ச் செய்திக்கும்
மலிந்த மொழிக்கும்
இழிந்த ரசனைக்கும்
இடம்தர வேண்டாம்
உலக நாகரிகத்தை
ஒழுங்கு படுத்துங்கள் pic.twitter.com/VqnomKMgZi
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக எலான் மஸ்க் தன்னுடைய பெரும் பகுதி டெஸ்லா பங்குகளை விற்பனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.