போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்க தயார்: “சாவின் வியாபாரி” என அழைக்கப்படும் விக்டர் போட் அறிவிப்பு
“சாவின் வியாபாரி” என அழைக்கப்படும் ரஷ்யாவின் பிரபலமான ஆயுத வியாபாரி விக்டர் போட், அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர் பிரிட்னி க்ரைனுக்கு மாற்றாக அமெரிக்க சிறையில் இருந்து சமீபத்தில் ரஷ்யாவால் பரிமாறிக் கொள்ளப்பட்டார்.
ரஷ்யா- அமெரிக்கா இடையே கைதி பரிமாற்றம்
அமெரிக்காவின் சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கைதியாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த “சாவின் வியாபாரி”(Merchant of Death) என அழைக்கப்படும் ரஷ்யாவின் பிரபலமான ஆயுத வியாபாரி விக்டர் போட், சமீபத்தில் ரஷ்யாவால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அமெரிக்க கூடைப்பந்து வீரர் பிரிட்னி க்ரைனுக்கு மாற்றாக அமெரிக்காவால் பரிமாறி கொள்ளப்பட்டார்.
BREAKING
— Sebastian Gorka DrG (@SebGorka) December 8, 2022
America-hating pothead Brittney Griner is being prisoner swapped back to the US for the most dangerous man in the World, Viktor Bout, the Merchant of Death.
Why would Biden do this now?
Exactly when Putin would profit most from having the biggest arms dealer home? pic.twitter.com/B9mD34rv7M
அமெரிக்காவும் ரஷ்யாவும் அபுதாபியின் டார்மாக்கில் தங்களது கைது பரிமாற்றத்தை செய்து கொண்டார்கள்.
இதன் மூலம் கடந்த 2008 சட்டவிரோத போராளிகளுக்கு ஆயுதம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு அமெரிக்காவின் ஸ்டிங் ஆபரேஷனில் கைது செய்யப்பட்ட விக்டர் போட், மீண்டும் ரஷ்யாவிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், விடுதலைக்கு பிறகு ரஷ்ய ஆதரவு தொலைக்காட்சியான RT அளித்த சிறப்பு பேட்டியில், நான் ரஷ்யன் என்பதில் பெருமை கொள்கிறேன், அத்துடன் நமது ஜனாதிபதி புடின் என்பதிலும் பெருமை கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Twitter
மேலும் “நாம் வெற்றி பெறுவோம் என எனக்கு தெரியும்”, சுதந்திர காற்றையும், பனியையும் கொண்டாடுவதாக விக்டர் போட் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரை ஆதரிக்கிறேன்
விக்டர் போட்-டை மரியா புட்டினா நேர்காணல் செய்த நிலையில், உக்ரைன் மீதான சிறப்பு இராணுவ நடவடிக்கையை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்த விக்டர் போட், “வாய்ப்பும் போதுமான திறமையும் இருந்தால்” நிச்சயமாக முன் ஆர்வலராக போரில் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் பிப்ரவரியில் தொடங்கிய போர் தாக்குதலை ஏன் முன்பே நாம் தொடங்கவில்லை என கேட்டுள்ளார்.
Russian spy Maria Butina greeted the merchant of death, Viktor Bout, at the airport in Moscow & sat him down for a propaganda interview, bashing the US.
— Rula Jebreal (@rulajebreal) December 10, 2022
As Putin tries to erase Ukraine, his propagandist discribes LGBTQ rights as “suicide of civilization.”pic.twitter.com/2zJJQYC5dE
20 ஆண்டுகளாக பொருளாதார தடை சுமந்து வந்த விக்டர் போட், மேற்கத்திய நாடுகளால் முதலில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் என தெரிவித்தார், மேலும் மேற்கத்திய நாடுகள் எனக்கு செய்த அனைத்தையும், தற்போது நமது நாட்டிற்கு செய்து வருகிறது என குற்றம் சாட்டினார்.