பாக்முட்டை முழுமையாக கைப்பற்றி விட்டோம் - வாக்னர் படைத்தலைவர்
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படைத் தலைவர் Yevgeny Prigozhin, உக்ரைன் நகரமான பாக்முட்-ஐ முழுமையாக கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளார்.
பாக்முட்
உக்ரைன் - ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட வாக்னர் கூலிப்படை விரைந்து செயல்பட்டு வருகிறது.
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஜப்பானில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.
அங்கு இந்தியா உட்பட பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசிய அவர், ஆதரவு தெரிவிக்கும் ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களுக்கும் நன்றி கூறினார்.
Ukraine, we’re not going anywhere.#G7
— Rishi Sunak (@RishiSunak) May 20, 2023
?? ? ?? pic.twitter.com/3GL2iWuyy2
வாக்னர் தலைவர்
இந்த நிலையில், கிழக்கு உக்ரேனிய நகரமான பாக்முட்டை முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக வாக்னர் கூலிப்படை தலைவர் அறிவித்துள்ளார்.
டெலிகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் வாக்னர் படைத்தலைவர் Prigozhin இதனை கூறியுள்ளார். அவருக்கு பின்னால் போராளிகள் இடிபாடுகளால் சூழப்பட்ட ரஷ்ய கொடியை வைத்திருந்தனர்.
Telegram/concordgroup_official
ஆனால் Prigozhinனின் இந்த கூற்றை உக்ரைன் நிராகரித்துள்ளது. மேலும், சண்டை இன்னும் நடந்து வருவதாக கூறியுள்ளது.