புலம்பெயர் மக்கள் போன்று ஐரோப்பாவில் ஊடுருவலாம்: வாக்னர் குறித்து பிரதமர் ஒருவர் எச்சரிக்கை
பெலாரஸில் உள்ள வாக்னர் கூலிப்படையினர் புலம்பெயர் மக்கள் போன்று காட்டிக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழையலாம் என போலந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புலம்பெயர் மக்கள் சட்டவிரோதமாக
மட்டுமின்றி, பெலாரஸிலிருந்து புலம்பெயர் மக்கள் சட்டவிரோதமாக இடம்பெயர்வதையும் வாக்னர் கூலிப்படையினர் எளிதாக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
@bbc
இந்த நிலையில், சுமார் 100 வாக்னர் துருப்புக்கள் போலந்து மற்றும் லிதுவேனியன் எல்லைகளுக்கு அருகில் உள்ள க்ரோட்னோ நகருக்கு அருகில் நெருங்கியுள்ளதாக போலந்து பிரதமர் Mateusz Morawiecki தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் வாக்னர் கூலிப்படையினர் முன்னெடுத்த கிளர்ச்சியானது தோல்வியில் முடிந்த நிலையில், ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் சுமார் 7,000 வாக்னர் படையினர் பெலாரஸ் நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர்.
பெலாரஸ் நாட்டில் வாக்னர் கூலிப்படையினர் தங்கியிருப்பது, உண்மையில் அண்டை நாடுகளுக்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்தும் என்பது உறுதி என்றார் பிரதமர் Morawiecki.
நிலைமை இன்னும் ஆபத்தானதாக
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் குடியேறுபவர்களுக்கு உதவுவதற்காக வாக்னர் கூலிப்படையினர் பெலாரஸ் எல்லைக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
@bbc
மட்டுமின்றி, தங்களை புலம்பெயர் மக்களாக காட்டிக்கொண்டு, வாய்ப்பை பயன்படுத்தி, ஐரோப்பிய நாட்டுக்குள் எளிதாக ஊடுருவும் வாய்ப்பும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெலாரஸ் நாட்டில் வாக்னர் கூலிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், நிலைமை இன்னும் ஆபத்தானதாக மாறி வருகிறது என்றார் அவர். இந்த நிலையில் தான், வாக்னர் கூலிப்படை தொடர்பில் தங்கள் எல்லையில் ஏதேனும் பிரச்சனை எழுந்தால்,
போலந்து, லிதுவேனியா மற்றும் லாத்வியா ஆகிய நாடுகள் கூட்டாக பெலாரஸுடனான தங்கள் எல்லைகளை மூட முடிவு செய்யலாம் என வியாழக்கிழமை போலந்தின் உள்விவகார அமைச்சர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |