போர் ரஷ்யாவை நோக்கி திரும்பி வருகிறது: ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் ரஷ்யாவை நோக்கி திரும்பி வருவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமையான நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்தது.
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், ஞாயிற்றுக்கிழமை 3 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது, மேலும் இரண்டு ட்ரோன்கள் அலுவலகங்கள் மீது மோதியது என்று தெரிவித்துள்ளது.
Russian media report a drone attack on Moscow. According to them, it is a building of Moskva-city where several Russian ministries are located. pic.twitter.com/85dUTfxT2s
— Anton Gerashchenko (@Gerashchenko_en) July 30, 2023
உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதலால் நகரத்தின் தென்மேற்கே அமைந்துள்ள Vnukovo விமான நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது.
ரஷ்யாவை நோக்கி திரும்பும் போர்
இந்நிலையில் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் ரஷ்யாவை நோக்கி திரும்பி வருவதாக எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோ உரையில், உக்ரைன் வலிமை அடைந்து வருவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் இரு நாடுகளுடனான போர் நடவடிக்கையில் ரஷ்ய பிரதேசங்கள் மீதான தாக்குதல் தவிர்க்க முடியாதது, இயற்கையானது மற்றும் நியாயமானது என்று தெரிவித்துள்ளார்.
"Gradually, the war is returning to the territory of Russia - to its symbolic centers and military bases, and this is an inevitable, natural and absolutely fair process," President #Zelensky in his evening address.
— KyivPost (@KyivPost) July 30, 2023
?: President’s Office pic.twitter.com/VwIrJkeKji
சில வாரங்கள் நடைபெறும் என்று ரஷ்ய தலைமை நினைத்து இருந்த சிறப்பு ராணுவ நடவடிக்கை இன்று 522வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த போர் நடவடிக்கையானது கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்யாவை நோக்கி நகர்ந்து அதன் அடையாள மையங்கள் மற்றும் இராணுவ தளங்களுக்கு திரும்பி வருகிறது.
ரஷ்ய போர் நடவடிக்கை நியாயமானது என்று நம்பும் ரஷ்ய மக்களுக்கு இத்தகைய ட்ரோன் தாக்குதல் மூலம் அவர்களது வீட்டுக்கு அருகே மிகப்பெரிய குண்டு வெடிப்பு ஏற்பட்டால் எத்தகையை உணர்வை ஏற்படுத்தும் என்பதை உணர வைப்பதற்கான வாய்ப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |