போரில் நாம் ரஷ்யாவை இழக்க கூடிய சூழல் உண்டாகும்: வாக்னர் படை தலைவர் எச்சரிக்கை
ரஷ்யா- உக்ரைன் உடனான போரில், உக்ரைன் ரஷ்யாவின் கிரிமியா நகரை கைப்பற்ற முனைவதாக வாக்னர் படை தலைவர் எச்சரித்துள்ளார்.
வாக்னர் படை தலைவர் எச்சரிக்கை
ரஷ்யாவின் கூலிப்படையாக வாக்னர் குழுவின் நிறுவனர், ரஷ்யாவின் மேல்தட்டு மக்கள் உக்ரைனில் போரில் ஈடுபடுவதில் தீவிரம் காட்ட வேண்டும், இல்லையெனில் போரில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
@reuters
வாக்னர் படை தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின், தனது டெலிகிராம் சேனலில் அளித்த பேட்டியில், உக்ரைன் பாக்முட்டை சுற்றி வளைத்து கிரிமியாவை தாக்க முயற்சிக்கும் என்று கூறியுள்ளார்.
திட்டமிட்டபடி அவர்கள் கிரிமியாவை தாக்க முற்பட்டால், ரஷ்யாவிற்கு ஆபத்து ஏற்படும் சூழல் உண்டாகும், எனவே நாம் ஒரு கடினமான போருக்கு தயாராக வேண்டும்,’ என்று அவர் எச்சரித்துள்ளார்.
மோசமான விளைவுகள் உண்டாகும்
மேலும் 'நாம் ரஷ்யாவை இழக்கக்கூடிய ஒரு நிலையில் இருக்கிறோம், அதுதான் முக்கிய பிரச்சனை, ரஷ்ய அரசு கடுமையான இராணுவச் சட்டத்தை விதிக்க வேண்டும்.’ என்கிறார்.
@afp
தனது தாய்நாட்டின் மீதான அன்பு மற்றும் விளாடிமிர் புதினுக்கு சேவை செய்வதன் மூலம், அவரது அரசியல் கண்ணோட்டம் ஆதிக்கம் செலுத்துவதாக பிரிகோஜின் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் மேல் தட்டு மக்கள், தங்கள் சொந்த மகன்களை போரிலிருந்து பாதுகாத்தது, அதே நேரத்தில் சாதாரண ரஷ்ய குடும்பத்திலிருந்து வந்த ராணுவ வீரர்கள் போரில் உயிரிழந்துள்ளனர், இது ரஷ்யாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தும்’ என்று அவர் கூறினார்.
@afp
சாதாரண ரஷ்யர்கள் தங்கள் மகன்களை போரில் இழப்பது தொடர்ந்தால், ரஷ்யா 1917 புரட்சியின் நடந்ததை போல் மோசமான விளைவை சந்திக்கும் என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் வாக்னர் குழு பாக்முட்டில் சண்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்னர் படையின் தலைவரான ப்ரிகோஜின், முன்னர் தனது படைகளை நகரத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.