150 வருடத்திற்கு முன் எல் நினோ கொடுத்த பேரழிவு.!வெதர்மேன் ஹேமச்சந்திரன் எச்சரிக்கை
உலக அளவில் எல் நினோ மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் அதனால் ஏற்படும் உலக அளவிலான பாதிப்புகள் குறித்து IBC தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் வெதர்மேன் ஹேமச்சந்திரன் விளக்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், எல் நினோ என்றால் என்ன? இந்த எல் நினோ எவ்வாறு உருவாகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு வெதர்மேன் ஹேமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.
இந்த எல் நினோ என்பது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம் உலக அளவிலான காலநிலை மாற்றங்கள் உருவாக கூடும் என்று வெதர்மேன் ஹேமச்சந்திரன் எச்சரிக்கிறார்.
குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை எல் நினோ காரணமாக தென் மேற்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என்றும். வெப்ப நாட்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்றும் வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் எல் நினோ-ஆல் ஏற்பட கூடிய விவசாய விளைச்சல் பாதிப்புகள் மற்றும் உணவு பொருள் தட்டுப்பாடு ஆகியவை குறித்தும் இந்த நேர்காணலில் விரிவாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |