உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும்... நிபந்தனை விதிக்கும் ரஷ்யா
எந்தவொரு சாத்தியமான போர் நிறுத்தத்தின் போதும், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆயுத விநியோகங்களை நிறுத்த வேண்டும் என ரஷ்யா கோரிக்கை வைத்துள்ளது.
நன்மையை வழங்க வேண்டும்
இல்லையெனில் அது உக்ரைனுக்கு சாதகமாக இருக்கும் என்றும், உக்ரைன் தனது முழுமையான படையெடுப்பைத் தொடர வாய்ப்பிருப்பதாகவும், புதிய துருப்புக்களையும் உக்ரைன் களமிறக்கலாம் என்றும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இந்த காலகட்டத்தை புதிய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ஏற்கனவே உள்ள ராணுவ வீரர்களுக்கு ஓய்வு அளிக்கவும் பயன்படுத்தும். அப்படியானால் உக்ரைனுக்கு நாம் ஏன் இவ்வளவு நன்மையை வழங்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த முடிவில்லாத போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவையும் உக்ரைனையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தினார். மட்டுமின்றி, உக்ரைன் ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறும் 30 நாள் போர்நிறுத்தத்திற்கு அவர் அழுத்தம் கொடுத்தார்.
ஆனால், மார்ச் 13 ஆம் திகதியிலேயே புடின் பகிரங்கப்படுத்தியதாக பெஸ்கோவ் மீண்டும் கூறினார், மேலும் மார்ச் 18 அன்று ட்ரம்புடன் தொலைபேசி அழைப்பில் ஈடுபட்டதாகவும் பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், போர் நிறுத்தம் தொடர்பில் விவாதிக்கும் நிலையில், அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தினமும் உக்ரைனுக்கு அனுப்பப்படும் ஆயுதங்களை என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.
முடிந்த அனைத்தையும்
அத்துடன் உக்ரைன் ஜனாதிபதி நேரிடையாக பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளாததன் மர்மம் குறித்தும் பெஸ்கோவ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும், அமைதியான மற்றும் தூதரக வழிமுறைகள் மூலம் ஒரு தீர்வை எட்டவும் ஜனாதிபதி புடின் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்.
புடின் கடந்த மாதம் ஒரு சிறிய இடைவேளை என குறிப்பிடும் வகையில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்தார். அதில், இரு தரப்பினரும் எண்ணற்ற முறை மீறியதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டினர்.
பின்னர், இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதால், இந்த வாரம் மேலும் மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
உக்ரைன் சமீபத்திய போர் நிறுத்தத்திற்கு உடன்படவில்லை, மேலும் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |