நாங்கள் இறக்கப்போவது முடிவாகி விட்டது! இங்கேயே உயிர் போகட்டும்... அதிர்ச்சி கொடுத்த நபர்
காசாவைச் சேர்ந்த நபர் ஒருவர் எங்கு சென்றாலும் இறக்கத்தான் போகிறோம், அதற்கு எங்கள் மண்ணியிலே உயிர் போகட்டும் என விரக்தியில் ஊடகத்திடம் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 8வது நாளாக நீடித்துள்ள நிலையில் காசா மக்கள் நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதுவரை இஸ்ரேலில் 1,300 பேரும், 1,799 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காசாவில் வாழும் மன்சூர் சௌமன் என்ற நபர் ஊடகத்திடம் பேசும்போது நாங்கள் இறப்பது உறுதியாகி விட்டது என மனமுடைந்து கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ' நாங்கள் நம்பிக்கை அற்றுப்போய்விட்டோம். காசா பற்றியும், இங்குள்ள மக்களைப் பற்றியும் யாருக்கும் அக்கறை இல்லை. நாங்கள் இறக்கப் போகிறோம் என்பது முடிவாகி விட்டதால், வீட்டிலேயே இறந்துகொள்கிறோம்.
Footage of strikes on #Hamas facilities in the Gaza Strip pic.twitter.com/XXQRCAR8P4
— NEXTA (@nexta_tv) October 13, 2023
வடக்கு தெற்கோ எங்கு சென்றாலும் கொல்லப்படத்தானே போகிறோம். எங்கள் உரிமைக்காக போராடியபடி , நெஞ்சை உயர்த்தி, எங்கள் நம்பிக்கையுடன் எங்கள் மண்ணிலேயே இறந்துவிடுகிறோம் ' என்றார்.
இதற்கிடையில் காசாவில் இருந்து மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |