இஸ்ரேல் - ஈரான் போரில் யார் யார் களமிறங்கக் கூடும்... விரிவான பின்னணி
இஸ்ரேலுக்கு எதிராக ஈரானும் ஹிஸ்புல்லா அமைப்பும் களமிறங்கக் கூடும் என்ற நிலையில் யார் யார் பக்கம் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.
ஆபிரகாம் உடன்படிக்கை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மத்திய கிழக்கில் ஒரு புதிய பிராந்திய கூட்டணியை நிறுவி அதற்கு ஆபிரகாம் உடன்படிக்கை என குறிப்பிட்டார். தற்போது தொடர்புடைய கூட்டணி ஈரானுக்கு எதிராக களமிறங்கக் கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஆனால் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகள் ஈரானுக்கு எதிராக போரிடுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த 2020 செப்டம்பர் மாதம் இஸ்ரேலுக்கும் அரேபிய நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஆபிரகாம் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது.
இதில் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்துள்ளன. இஸ்ரேலின் இந்த ஆபிரகாம் கூட்டணியானது ஈரானை எதிர்கொள்ளும் என்றே கூறப்படுகிறது.
ஈரானின் திட்டத்திற்கு
ஆனால் ஈரான் பக்கம் லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதிகள், ஈராக்கின் பல்வேறு இன அமைப்புகள், சிரியாவில் உள்ள போராளிக் குழுக்கள் மற்றும் காஸாவில் உள்ள ஹமாஸ் படைகளும் களமிறங்கலாம் என்கிறார்கள்.
இந்த அமைப்புகள் அனைத்தும் ஈரானின் திட்டத்திற்கு ஏற்றார்போல செயல்படுபவர்கள். மட்டுமின்றி, மத்திய கிழக்கில் தங்களுக்கு என செல்வாக்கு கொண்டவர்கள்.
இந்த அணி இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கும் என்றால், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேலை ஆதரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |