உலகம் முழுவதும் வேகமாக பரவும் தொற்று: உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை
உலகம் முழுவதும் சூப்பர் ப்ளூ என அழைக்கப்படும் வைரஸ் தொற்று ஒன்று பரவிவருகிறது.
அது கொள்ளை நோயாக உருவெடுக்கும் திறன் கொண்டது என கருதப்படும் நிலையில், அந்த வைரஸ் தொற்று தொடர்பில் உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவும் தொற்று

உலக நாடுகள் பலவற்றில், Super flu என அழைக்கப்படும் ப்ளூ காய்ச்சல் (Influenza) பரவிவருகிறது.
Influenza A (H3N2) என்னும் வைரஸால் பரவும் இந்த தொற்று, பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ள சில நாடுகளில் வழக்கத்தைவிட சீக்கிரமாகவே துவங்கியுள்ளது. சில நாடுகளில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
அதே நேரத்தில், பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ள சில நாடுகளில் வழக்கத்தைவிட அதிக நாட்களுக்கு ப்ளூ தொற்று நீடிக்கிறது.
ஆக மொத்தத்தில் இது வழக்கமான ப்ளூ தொற்றாக இல்லாமல், சற்றே மாற்றமடைந்த தொற்றாக உள்ளது. அறிவியல் ரீதியாக கூறினால், மரபணு மாற்ற ப்ளூ வைரஸ் ஒன்று இந்த தொற்றை உருவாக்குகிறது.

இந்த ப்ளூ தொற்றை உருவாக்கும் வைரஸ், கொள்ளைநோயாக மாறும் திறன் கொண்டது என எச்சரித்துள்ள உலக சுகாதார அமைப்பு, வைரஸ் மாறினாலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது அத்தியாவசியம் என்றும் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |