பயண எச்சரிக்கை விடுத்துள்ள இன்னொரு ஐரோப்பிய நாடு: போராடும் மக்கள்
கோடை காலத்தில் விடுமுறையை கொண்டாட ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கும் பிரித்தானியர்களுக்கு இந்தமுறை கடும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
பாதிப்பை ஏற்படுத்திய காட்டுத்தீ
இத்தாலி, கிரேக்கம் உட்பட பல நாடுகளில் பற்றியெரியும் காட்டுத்தீயால், அங்குள்ள அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிரேக்கத்தில் ரோட்ஸ் மற்றும் கோர்ஃபு தீவுகளில் காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
@getty
குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், அவசர தேவைகளுக்காக மட்டும் குறிப்பிட்ட நிறுவனங்கள் விமான சேவையை முன்னெடுத்தன.
இந்த நிலையில் மஜோர்காவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அதே நேரத்தில் ஐபிசா மற்றும் மெனோர்காவும் அதிக ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
600 தீயணைப்பு வீரர்கள்
இத்தாலி, கிரேக்க நாடுகளின் வரிசையில் தற்போது போர்த்துகல் நாடும் காட்டுத்தீ ஆபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் லிஸ்பனுக்கு மேற்கே 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள விடுமுறை தலமான காஸ்காய்ஸ் அருகே தீ விபத்து ஏற்பட்டது.
@Shutterstock
தீயை அணைக்கவும், வீடுகளை பாதுகாக்கவும் குடியிருப்பாளர்களும் தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர். தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் விமானங்களும் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |